டி 20 போட்டிகளில் கோலிக்குப் பின் முதல் இடத்தைப் பிடித்த இந்திய வீரர்!

0
177

டி 20 போட்டிகளில் கோலிக்குப் பின் முதல் இடத்தைப் பிடித்த இந்திய வீரர்!

இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இப்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரின் உச்சபட்ச தரவரிசையாகும். சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளைப் பெற்றார். கோஹ்லி மற்றும் ராகுலுக்கு அடுத்தபடியாக அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாபர் அசாம் இரண்டாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக வீரர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நான்காம் இடத்திலும் தொடக்க ஆட்டக்காரராகவும் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleNayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர்
Next articleசர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன்