சிவசங்கர் பாபாவின் ரகசிய அறைக்கு மாணவிகளை அழைத்து வருவதே சுஷ்மிதா தான்! -விசாரணையில் பகீர்!

Photo of author

By Kowsalya

பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறி நடந்துகொண்ட சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை பற்றி நேற்று விசாரணையில் தெரியவந்தது.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளராக சிவசங்கர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று நடந்த விசாரணையில் ரகசிய அறையில் வைத்து தான் பாலியல் தொல்லை கொடுத்ததாக உண்மை வெளிவந்த நிலையில் ரகசிய அறைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

நேற்று சிவசங்கர் பாபா அவருக்கு உதவியாக இருந்த மூன்று ஆசிரியைகளை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். அதில் சுஸ்மிதா என்ற ஆசிரியை கைது செய்துள்ளனர்.

சுஸ்மிதா என்ற ஆசிரியை தான் சிவசங்கர் பாபா அவருக்கு உதவியாளராக இருந்த மாணவர்களை அந்த ரகசிய அறைக்குள் அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

நீரஜ் மற்றும் கருணா என்ற இரு ஆசிரியர்கள் இடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் மாரடைப்பு ஏற்பட்டதாக சிவசங்கர் பாபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விரைவில் சீல் வைக்கப்பட்ட அந்த அறையைத் திறந்து போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.