மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர செயல்!

Photo of author

By Sakthi

உத்தரபிரதேச மாநிலம் நேத்நகர் என்ற இடத்தில் சின்னார் யாதவ் மற்றும் விமலா தம்பதிகள் வசித்து வந்தார்கள். சின்னார் யாதவ் மனைவியுடைய நடத்தையில் சந்தேகப்பட்டதன் காரணமாக,. கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக விமலா அடிக்கடி கோபம் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதேபோல சண்டைக்கு பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வருவது அந்த கணவருக்கு வழக்கமாக போயிற்று. இந்த நிலையில், சென்ற வாரம் விமலா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்த விமலாவிடம் அவரது கணவர் விசாரித்து இருக்கின்றார். ஆனால் நான் யாரையும் பார்ப்பதற்காக போகவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் அதனை காதில் போட்டுக் கொள்ள மறுத்த அவருடைய கணவர் அரிவாளை எடுத்து தன்னுடைய மனைவியின் தலையை துண்டாக வெட்டியிருக்கின்றார். அதோடு துண்டித்த தலையை கையில் ஏந்தியபடி சாலையில் எல்லோரும் பார்க்கும்படியாக அவர் எடுத்துச் சென்றிருக்கிறார் இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த மக்கள் பயத்தில் உறைந்து போயினர்.

இதனையடுத்து மனைவியின் தலையுடன் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்த இருக்கின்றார். அவரை கைது செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.