சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம் என்ற தொழிலதிபர் பணக்கார வாழ்க்கையில் வெறுப்படைந்து எளிமையாக வாழ விரும்பினார். இதனால் இந்தியா வந்த அவர் கோவையில் உள்ள ஒரு தியான மையத்தில் தங்கினார். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர் தனது உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கு கோவை ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருவதாக செதிகள் வெளிவந்துள்ளது
கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் பல கோடி சொத்துக்கு உரிமையாளரான கிம் இதுகுறித்து கூறுகையில், “நான் எளிமையாக வாழ விரும்பிதான் கோவையில் உள்ள தியான மையத்திற்கு வந்தேன். மனநிம்மதிக்காக மக்களிடம் பிச்சை பெற்று, அதில் கிடைக்கும் பணத்தில் உணவு வாங்கி சாப்பிட்டு வருகின்றேன். மன நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பணம் தான். பணம் இல்லையென்றால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தத்துவ மழை பொழிகிறார்.
வெளிநாட்டுக்காரர் ஒருவர் நம்மூரில் பிச்சை எடுப்பதை கோவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும் அவருக்கு பலர் ஆவத்துடன் பணம் கொடுத்து வருகின்றனர். தனக்கு பிச்சை கொடுப்பவர்களை கிம் வணங்கி நன்றி சொல்கிறார்.