இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது!

Photo of author

By Hasini

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது!

திருமணத்தை மீறிய மறைமுக உறவு என்பது தற்போது தெருவிற்கு தெரு வளர்ந்துவரும் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் காணவனும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அதை சரிவர செய்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான் நொய்டாவிலும் நடந்துள்ளது. நொய்டாவை  சேர்ந்த பெண்ணொருவர் கூலிப்படையை ஏவி தனது கள்ளக் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த விஷயம் எப்படியோ ரகசிய போலீசாருக்கு தெரிய வரவே அந்தத் திட்டம் தவிடு பொடி ஆக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் 39 வயதான பெண் ஒருவர்  வசித்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டி டியூஷன் கொண்டு சேர்த்துள்ளார். அந்த ட்யூசன் எடுக்கும் ஆசிரியருக்கு வயது 35. அங்கு டியூஷன் படிக்க குழந்தைகளை கொண்டு சேர்க்க, திரும்ப வீட்டிற்கு அழைத்து வர என பொய் வரவே  அந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்து கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் பலமுறை தனியாக சந்தித்து பல பலான லீலைகளை செய்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு வயது இந்த பெண்ணை விட குறைவு. இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு நொய்டாவில்  வீட்டை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊர் பக்கம் சென்று விட்டார். அவரது சொந்த ஊரானது உத்தரப்பிரதேசத்தின் அருகே உள்ள ஜான்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவரது பெற்றோர் அவரது திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்து உள்ளனர். அங்கு சென்று அவர் இந்த கள்ளக்காதலியுடன் பேசுவதை சிறிது சிறிதாக குறைத்து விட்டார். மேலும் சமீபத்தில் அவருக்கு திருமணமும் முடிந்து உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பு வரை இந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளார். அவருக்கு திருமணம் முடிந்ததை அடுத்து அவர் இந்த பெண்ணுடன் பேசுவதை அறவே நிறுத்திவிட்டார்.

மேலும் அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணையும் அவர் பிளாக் செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன் கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டுவது என முடிவு செய்து ஒரு கூலிப்படையிடம் இது குறித்து பேசியுள்ளார். அவர் தீட்டிய இந்த திட்டம் ரகசிய போலீசார் மூலம் போலீசாருக்கு கிடைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.