பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

Photo of author

By CineDesk

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழக அணியின் கேப்டன் அஸ்வின் கடைசி வரை களத்தில் இருந்தும் அந்த அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் பெற்றது

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசியதை அடுத்து கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 181 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

தமிழக அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் அஸ்வின் மற்றும் ஷங்கர் களத்தில் இருந்தனர். முதல் இரு பந்துகளை அஸ்வின், பவுண்டிரிக்கு விரட்டியதால் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் 4வது பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுக்க, 5வது பந்தில் ஷங்கர் அவுட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் ஒரே ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை நழுவ விட்டது