உங்களுக்கு இந்த பழக்கங்கள் இருந்தால்.. நிச்சயம் இந்த நோய் இருக்கும்..!!

Photo of author

By Priya

(Pitham in tamil): இந்த நவீனக் காலத்தில் நமது உடம்பில் எண்ணற்ற வகையில் நோய்கள் உருவாகி கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு தான் பெரும்பாலான நோய்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இளைஞர்களுக்கும், சிறிய குழந்தைகளுக்கும் கூட நோய்களால் அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம் நாம் ஏற்படுத்திக்கொண்ட பழக்க வழக்கங்கள் தான். காலநிலை, சுற்றுச்சூழல் ஒருபுறம் இருந்தாலும் நம்மிடம் தினசரி இருக்கும் பழக்க வழக்கள் மூலம் நமது உடம்பில் நோய் வருகிறது. அதனை பற்றி இந்த பதவில் பார்க்கலாம்.

பித்தம்

நாம் இந்த வார்த்தையை கேள்விபட்டிருப்போம். பித்தம் தலைக்கேறி பைத்தியம் பிடித்து விட்டது என்று, ஒரு சிலர் கேட்டால் எனக்கு பித்தம் அதிகமாகிவிட்டது என்று கூறுவார்கள்.

பித்தம் நமது உடலுக்கு தேவைப்படும் ஒன்றாகும். இந்த பித்தம் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்தத்தை சேமித்து வைத்திருக்கும் பகுதியை தான் நாம் பித்தபை என்கிறோம். இந்த பித்தம் நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதிலும், கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அளவு சீராக இருந்தால் நமது உடல்நிலையும் நன்றாக இருக்கும்.

ஆனால் பித்தம் அதிகம் அதிகமாகி விட்டால் நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், அல்சர், அஜீரணக்கோளாறு, பித்தப்பை கல் என அனைத்து நோய்களும் அடுத்தடுத்து ஏற்பட காரணமாக (Pitham Athikarikka Karanam)  உள்ளது.

பித்தம் அதிகரிக்க காரணம்

இந்த பித்தம் அதிகமாக சுரப்பதற்கு காணரம் அதிகப்படியான எண்ணெய் பலகாரங்ளை உட்கொள்வது, அதிக காரம் கொண்ட உணவுகளை சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, மதுபானங்களை குடிப்பது போன்ற காரணங்களால் பித்தம் அதிகரிக்கிறது.

அறிகுறிகள்

பித்தம் அதிகரித்தால் வாய் கசப்பு, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, இளநரை, உடல் சூடு, கால் பாதங்களில் வெடிப்பு (பித்த வெடிப்பு), மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சனை, தோல் வறட்சி, தலை முடி உதிர்வு, பசியின்மை, சளி, இருமல், மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்தல்.

தடுப்பது எப்படி

இதனை குறைப்பதற்கு இஞ்சியை தேனில் ஊறவைத்து தினமும் காலையில் 2 முதல் 3 சிறிய துண்டுகளை சாப்பிட்டு வரலாம்.

ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, மாதுளம்பழம், மற்றும் சுரக்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறி, பழங்களை சாப்பிட்டு வரலாம்.

புதினா, கறிவேப்பிலை சாறு குடித்து வரலாம். தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். மேலும் மன அழுத்தத்தை தவிர்தல், அடிக்கடி எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் குடித்து வரலாம்.

மேலும் படிக்க: இவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்டதா கசகசா? ஆனால் மற்ற நாடுகளில் இதற்கு தடை ஏன்?