டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

Photo of author

By Parthipan K

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார்.

 

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன…

 

ஆனாலும், தற்போது மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

 

டி.ராஜேந்தர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.