சிகிச்சையில் குணமாகி இந்தியா திரும்பும் T ராஜேந்தர்… எப்போது? … வெளியான தகவல்!
சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற டி ராஜேந்தர் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவரின் மகன் நடிகர் சிம்பு, மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நியுயார்க் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் விரைவில் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிநாட்டில் கூடவே இருந்து தந்தையைப் பார்த்துக்கொண்ட சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார். இந்நிலையில் இப்போது சிகிச்சையில் முழு குணமாகியுள்ள T ராஜேந்தர் நாளை காலை சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.