இசை புயல் என அழைக்கப்படக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவிற்காகவும் தன்னுடைய இசையின் சாதனையாகவும் பலமுறை பல விருதுகளை வென்று குவித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசை என்றாலே அதற்கு தனி கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய வாழ்வை முழுவதுமாக மாற்றியது டிஆர் அவர்கள் தான் என தெரிவிப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து இருக்கிறது.
80 90 கால கட்டங்களில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ரஜினி கமல் அவர்களே பொறாமைப்படும் அளவு உயர்ந்து நின்றவர் டி ஆர் ராஜேந்திரன் அவர்கள். இவர் தன்னுடைய பாடல்கள் ஆளும் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய தன்னுடைய தனி திறமையாலும் திரைக்கதை இயக்கம் போன்றவற்றாலும் மக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவராக இன்றளவும் விளங்கி வருகிறார். தன்னுடைய தக் லைஃப் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கமல் அவர்கள் கூட எங்களுக்கு இணையாக எங்களுடைய காலகட்டத்தில் டி ஆர் அவர்களின் பேனர்களை பார்க்கும்பொழுது பல நாள் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் டி ஆர் குறித்து தெரிவித்திருப்பதாவது :-
இளையராஜா எம் எஸ் வி என பல முன்னணி இசையமைப்பாளர்களோடு தான் பணியாற்றி இருப்பதாகவும் ஆனால் டி ஆர் அவர்களோடு பணியாற்றியது தன்னுடைய மொத்த வாழ்வையும் மாற்றியது மட்டுமல்லாது தனக்கு இன்றளவும் டி ஆர் அவர்கள் இன்ஸ்பையராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்பொழுதும் தனிமையை மட்டுமே விரும்பக் கூடியவனாக இருந்த நான் அனைவருடனும் பழகுவதற்கு காரணமாக அமைந்ததும் டி ஆர் அவர்கள் தான் என பெருமைப்பட ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் பேசி இருப்பது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.