இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோஹித்- பும்ரா சேர்ப்பு!

0
223

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!  ஒரு நாள் போட்டியில் ரோகித் – பும்ரா சேர்ப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த அணிகளுக்கு இடையே ஆன முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இந்த டி20 போட்டியின் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக உள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் மூத்த வீரர்கள் ரோஹித் கே. எல்.ராகுல் விராட் இடம் பெறவில்லை. காயம் காரணமாக முன்னாள் டி20 உலக கோப்பை போட்டியில் விலகி இருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை.

இந்தப் போட்டிக்கான இந்தியா அணியின் வீரர்கள் கடந்து சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் பும்ரா இடம்பெறவில்லை. ஒரு நாள் தொடருக்கான போட்டியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்;

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்) இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்) வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ்,  உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங்.

Previous articleகும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் – தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட திமுக 
Next articleFD கணக்கில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here