ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் கூட முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீச்சு சரியாக இல்லை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரரான தமிழகத்தைச் சார்ந்த வேகபந்துவீச்சாளர் நடராஜன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு அவருடைய பந்துவீச்சை ஒரு காரணமாக அமைந்தது.
துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு மூலமாக தூள் கிளப்பி வருகின்ற நடராஜன் அந்த ஆட்டத்தில் தொடங்கி தொடந்து தன்னுடைய இடத்தை உறுதி செய்து வரும் நடராஜன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சின் பலத்தையும் அதிகப்படுத்தியிருக்கின்றார் முதலாவது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை விழுத்திய நடராஜன் இரண்டாவது போட்டியில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியுடைய வெற்றியில் முக்கிய பங்கு வகித்து இருக்கின்றார் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடராஜனின் தாக்கம் இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதற்கு முந்தைய ஆட்டங்களில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு புதுவீயூகத்துடன் பதிலடி கொடுக்கும் முடிவுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க இருக்கின்றது அதேவேளையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி முயற்சி செய்யும் ஆகவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிவிக்கிறார்கள்.