கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்ட தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் செவிலியர்களிடம் அநாகரிகமான நடவடிக்கை!

0
120

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரை அரசு பரிசோதனைக்கு அழைத்துள்ளது, அதில் சிலர் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வந்தனர்.

இதனையடுத்து அரசு உத்தரவின் பேரில் அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் டெல்லி காஸியாபாத்தில் அனுமதிக்கப்பட்ட சிலர் இரவு வேளையில் செவிலியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தகவல் வந்தது. ஆரம்பத்தில் விருப்பப்பட்ட உணவுகளை கேட்டும், பீடி சிகரெட் தர செல்லி ரகளை செய்துள்ளனர், பின்னர் இரவு வேளையில் செவிலியர்கள் முன்பு நிர்வாணமாக நின்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்று இரவு அந்த மருத்துவ முகாமில் இருந்து காஸியாபாத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டு போலீசார் நேரில் வந்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் 6 நபர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டது உறுதியாகி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் நேற்று மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவ முகாமில் சிலர் ஒத்துழைப்பு அளிக்க முறுத்து ரகளை செய்ததால் காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது.

Previous articleஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
Next articleமதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு!