தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

Photo of author

By Parthipan K

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்.

அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை தங்களின் சுய வருமானத்தை பெருக்குவதற்காக முடக்கி வைத்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டாயமாக்கப்பட்ட பின் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி விநியோகித்தது. இவற்றில் 11 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் இயக்காமல் முடங்கியுள்ளன. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மொத்தம் 1.86 கோடி ரூபாய் கட்டண நிலுவை வைத்திருக்கின்றனர். அரசு கேபிளை இயக்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ்க்களை இயக்கி லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் செட்டாப் பாக்ஸ்க்களை அவர்களே முடக்கி வைத்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கேபிள் டிவி தாசில்தார்கள் அலட்சியமாக இருப்பதால் தான்‌ அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. கேபிள் கட்டணம் குறைக்கப்பட்ட பின்பும் மக்களிடம் வரவேற்பு இல்லை என கேபிள் டிவி நிறுவனத் தலைவர் தலைவர் திரு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் கேபிள் தாசில்தார்களையும் ஆப்ரேட்டர்களையும் கண்டித்துள்ளார்,

பழைய ஆப்ரேட்டர்கள் ஒத்து வராவிட்டால் அரசு செட்டாப் பாக்ஸ்களை இயக்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிதாக வாய்ப்பு கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அரசுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள ஆபரேட்டர்களை அழைத்து பேசி செட்டாப் பாக்ஸ்களை இயக்க வலியுறுத்தவேண்டும் என்றும், உடன்படாவிட்டால் கட்டணத்தை வசூலிக்க நோட்டீஸ் வழங்க வேண்டும். குறிப்பிட்ட அவகாசத்தில், கட்டண நிலுவை செலுத்தாமல் இருந்தால் போலீஸுடன் சென்று ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்