பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை, இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் … Read more