கொரோனா தொற்றால் பாதித்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதேப்போல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 … Read more