விவசாயிகளுக்கு எச்சரிக்கை! கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைந்த 130 யானைகள்!!

கர்நாடக மாநிலம் பன்னர்கெட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் 130 காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் கேழ்வரகு கொள்ளு போன்ற பயிர்கள் பயிரிடப்படுவது வழக்கம். இந்த தானியங்களை தின்பதற்காக, ஆண்டுதோறும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கர்நாடக வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக் கோட்டத்தில் இந்த யானைகள் இரண்டு … Read more

ஒசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டதீவிரம் !!

ஓசூரில் அமைந்துள்ள தளி வனப்பகுதி முகாமிட்டுள்ள யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி,ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான யானைகள் வருடத்திற்கு ஒருமுறை இடம் பெயர்கின்றனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடமும் 50-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று அங்கிருந்து இடம்பெயர்ந்து தளி என்னும் வனப்பகுதியில் பலகரை காப்புகாட்டிற்கு வந்தன. மாவட்ட வன அலுவலர் பிரபு அவர்களின் உத்தரவுபடி, தளி வானஅதிகாரி நாகராஜ் வனவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான … Read more