3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?
3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பணி புரிந்தவர் சவுமியா பாண்டே. இவர் சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கர்ப்பிணியாக இருந்த சவுமியா பாண்டேவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவ கால விடுப்பு எடுக்காமல், பெண் அதிகாரி சவுமியா பாண்டே தன் பணிகளை மேற்கொள்ள 3 வார கால கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா பாண்டே தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு … Read more