முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார். … Read more