பாஜகவின் சூசக அரசியல்: திராவிட அரசியலை கடுமையாக சாடி வெள்ளை அறிக்கை கேட்ட அண்ணாமலை

50 ஆண்டு காலங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட அரசியல், தமிழுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்று புதிதாக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளார். புதிதாக பாஜகவில் இணைந்தள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அதில், “தமிழகத்தின் முன்னேற்றம் பற்றிய சிந்தனையாக தான் எனது அரசியல் இருக்கும் எனவும், நான் பாஜகவில் இணைந்தது பெருமையாக உள்ளது எனவும், தேர்தலில் எந்த இடத்தில் … Read more

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தற்போது டெல்லியில் முரளிதர ராவ் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த அண்ணாமலை, “திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” எனும் திருக்குறளுக்கு முன்னுதாரணமாக பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி தற்போது இருக்கின்றனர் என கூறினார். “தான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே சேர்ந்துள்ளேன். கட்சியின் … Read more

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார். … Read more