காய்கறி சந்தையை நேரில் ஆய்வு!!

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தையை ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். முகக்கவசம், கையுறை … Read more

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

கொரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமான சேவை முடங்கி உள்ளதால், நான்கு மாத காலமாக கர்நாடகாவில் தங்கி, கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டுள்ளார் ஒரு ஸ்பெயின் நாட்டு குடிமகள் ட்ரெசா சொரியானோ. ஸ்பெயினின் நகரமான வலென்சியாவைச் சேர்ந்தவர் ட்ரெசா சொரியானோ (வயது 34). இவர் தொழில்துறை வடிவமைப்பாளராக உள்ளார். இவர் இந்தியா மற்றும் இலங்கையை சுற்றிப் பார்க்க கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவில் கொரோனா … Read more

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார். … Read more

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

சென்னை: அனைத்து வங்கி கிளைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் (100%) பணிக்கு வர வேண்டும் என்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பால் போடப்பட்ட உத்தரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில், வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி … Read more

திமுக எம்.எல்‌.ஏ.விற்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக எம்எல்ஏ ராமசந்திரன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more

கொரோனா காரணமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூல்!

உலக நாடுகளின் பட்டியலில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களிடையே கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆனாலும் மக்கள் இதனையும் மீறி வெளியே செல்கின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை … Read more

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு! உலகிற்கே நோயைப் பரப்பி விட்ட சீனாவில் நோய்த்தொற்று என்ன நிலையில் உள்ளது? வெள்ளம் என்றார்களே ஏதோ dam என்றார்களே ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது ?சீனா உலகிற்கு ஏன் உண்மையை மறைக்கிறது?பல வெளிவராத உண்மைகள் இதோ உங்கள் பார்வைக்கு!! சீனாவின் கொரோனா நிலை: சீனாவில் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசுகிறது உய்கூர் என்னும் பகுதியில் வாழும் 67 சீன இஸ்லாமியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் … Read more