அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து சம்பா பயிர்களில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் திருவாரூர் விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ்எருக்காட்டூரை தேர்ந்தவர் தனசேகரன். இவரது நிலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாய் திடீரென உடைந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிரில் பரவியது. இதைப் பார்த்த தனசேகரன் செய்வதறியாது திகைத்து போய் இருக்க, சம்பா பயிர்களை பயிரிட்டு உள்ள அடுத்தடுத்த வயல்களுக்கும் கச்சா எண்ணெய் … Read more