கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய கட்டணமில்லா இலவச தொலைப்பேசி சேவையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு … Read more