ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தியில் பதில் தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்காமல் இருந்தது சம்பந்தமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சனும், வெங்கடேசனும், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். … Read more

இந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!

பாஜகவின் மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் கட்டாய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.   மேலும், மத்திய அரசு அலுவலகக் … Read more

“மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது” என மத்திய அரசு துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ஆயுஸ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே மீது ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சியில், “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்” என ஆயுஷ் செயலாளர் திரு.ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது எனவும், ‘ஆங்கிலத்தில் பயிற்சி … Read more

அதிகார மமதையில் மத்திய அரசு செய்த காரியம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இந்தியை திணிக்க மத்திய அரசு தமிழக மருத்துவர்களை அவமதித்த செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் “ஆயுஷ் பயிற்சி: இந்தியை திணித்து தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா?” தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய … Read more