ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!!
ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!! இந்தியா-வங்காளதேசம் இடையேயான 2-வது ஒருநாள் போட்டியானது ஹசன் மிராஸ் சதத்துடன் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. இந்தியா வங்காளதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மிர்பூரில் விளையாடி வருகிறது.இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் இந்திய பௌலர்களின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திணறியதால் முதல் 6 விக்கெட்டுகள் சரசரவென சரிந்தது. தள்ளாடிய வங்காளதேசத்தை 7 வது விக்கெட்டுக்கு கரம் கோர்த்து சேர்ந்த ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்த நிலையில் உமர் மாலிக் பந்து வீச்சில் மக்முதுல்லா 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முந்தைய ஆட்ட ஹீரோவான ஹசன் இந்த ஆட்டத்திலும் கலக்கினார்.பவுண்டரிகள்,சிக்சர்களாக விளாசினார். 8-வது விக்கெட்டுக்கு ஹசனுடன் … Read more