தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோய்த்தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அன்றிலிருந்து இன்றுவரையில் நோய்த்தொற்று பரவல் இருந்து வருவதன் காரணமாக, தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நோய்த்தொற்று பரவல் தீவிரத்தைப் பொறுத்து அவ்வபோது ஊரடங்கு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது, கடந்த 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவு பெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் … Read more

சென்னையில் மழையின் எதிரொலி! முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

சென்னையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட சூழ்நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தியாகராயரநகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினபாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி. நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு சாலைகளில் … Read more

பிரதமரை வரவேற்க தயாராகும் தமிழக அரசு! பாஜக திமுக கூட்டணி ஏற்பட இருக்கிறதா?

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த சூழ்நிலையில், அவரை கடுமையாக எதிர்க்கும் விதமாக கோ பேக் மொடி என்ற போராட்ட முழக்கத்தை முன்வைத்து திமுக தெருமுனை முதல் சமூகவலைதளம் வரையில் போராட்டம் நடத்தியது. ஆனாலும் தற்சமயம் தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி என்ற நிலையை அடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரவிருக்கும் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக தயாராகிவருகிறது தமிழக அரசு. … Read more

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இவர் அடையாறு சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார், இவருக்கு இதயக் கோளாறு உண்டாகி இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று மாலை மாரடைப்பு காரணமாக, அவர் மரணமடைந்தார். அவருக்கு 73 வயது என்று சொல்லப்படுகிறது. இவர் பழம்பெரும் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் என்று சொல்லப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார், … Read more

புதிய வகை நோய் தொற்று! முதலமைச்சரின் வேண்டுகோள்!

புதிய வகை நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். புதிய வகை நோய் தொற்றுக்கு இடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதன் மூலமாக புதிய வகை நோய் தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பல்வேறு மாநிலங்களும் கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இருக்கின்றன. ஒடிசா, புதுடில்லி, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

ஏற்கனவே கொரோனா தொற்றால் இந்தியா வெகுவாக பாதிப்படிந்திருக்கிறது தற்போது இந்த பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, இந்தியா விடுபட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை மிக வேகமாக செயல்படுத்துவது தமிழக அரசு என்பது மகிழ்ச்சியான செய்தி. இந்தநிலையில், நாட்டில் புதுடெல்லி, மகராஷ்ட்டிரா, தெலுங்கானா, கேரளா, உட்பட பல்வேறு மாநிலங்களில் புதிய பாதை நோய் தொற்று பரவியிருக்கிறது. இதுவரையில் … Read more

மீண்டும் மஞ்சப்பை திட்டம்! தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

ஒரு பிளாஸ்டிக் பை பொது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் தான் இருந்தாலும் அவை மக்கிப்போவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதிகப்படியான இந்த பாஸ்டிக் மாசுபாடு காரணமாக, நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்து மேலும் கடல்வாழ் உயிரினங்கள் உட்பட நம்முடைய சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நம்முடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான சூழ்நிலையையும், இந்த பிளாஸ்டிக் மாசுபாடு உண்டாக்கி வருகின்றது. ஆகவே இதனை கருத்தில் … Read more

சண்முகநாதன் மறைவு! கோபாலபுரத்து தூணை இழந்து விட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன் அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த காலத்திலிருந்து அவர் இறுதி மூச்சு வரையில் கருணாநிதியின் அருகிலேயே அவர் நிழல்போல இருந்து வந்தவர் சண்முகநாதன். இந்தநிலையில், அவர் வயது மூப்பு காரணமாக, சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருக்கின்ற காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இது தொடர்பான விவரம் அறிந்த திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்தார். … Read more

ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சரை பங்கம் செய்த டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 40-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுயபச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சி செய்யலாமா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்றார், சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்று கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் நான் எப்போதுமே அதிகமாக … Read more

தொல்காப்பியப் பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 2008ஆம் வருடம் சென்னை அடையாறில் 58 ஏக்கர் பரப்பிலான தொல்காப்பிய பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்டது. இதனை தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் பார்வையிட்டு அங்கு நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் ஒன்றாக இணைந்து … Read more