காய்கறி சந்தையை நேரில் ஆய்வு!!
காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தையை ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். முகக்கவசம், கையுறை … Read more