நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.நமது சருமத்தை நல்ல முறையில் பராமரித்து வந்தால் வயதானாலும் இளமை தோற்றத்தை தக்க வைக்க முடியும்.நமது சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்க வேண்டுமென்று கண்ட க்ரீமைகளை உபயோகப்படுத்தி சருமத்தை பாடாய் படுத்தி எடுக்கின்றனர்.
நமது சருமத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட என்ன காரணம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.நாம் சருமத்தை நல்ல தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாவிட்டால் சரும ஆரோக்கியம் மோசமாகும்.
கைகளை அடிக்கடி முகத்தில் வைத்தால் பாதிப்பாகும்.கைகளில் இருக்கின்ற அழுக்குகள் முகத்திற்கு நேரடியாக சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.நிம்மதியற்ற தூக்கத்தால் சரும ஆரோக்கியம் மோசமாகும்.கருவளையம்,சருமம் பொலிவற்று போதல் போன்ற பிரச்சனைகள் தூக்கமின்மையால் ஏற்படுகிறது.
ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் சரும ஆரோக்கியம் மோசமாகும்.தங்கள் சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருள் பயன்படுத்த தவறினால் முகப்பரு,கரும் புள்ளிகள்,தழும்பு உருவாதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அடிக்கடி முகம் கழுவாமல் இருந்தால் சருமத்தில் டெட் செல்கள் அதிகமாகிவிடும்.இதனால் இளம் வயதில் வயதான தோற்றத்தை சந்திக்க நேரிடும்.முகத்தை சுத்தம் செய்யாமல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
சருமத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தால் அதை முறையாக சுத்தம் செய்யாதபோது சரும ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அடிக்கடி சருமத்தை கழுவினாலும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்தால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
அதிக மனக் கவலை மற்றும் மன அழுத்தப் பிரச்சனை இருந்தால் சரும ஆரோக்கியம் பாதிப்படைந்துவிடும்.எனவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்.