‘தலைவி’ திரைப்படம் டிரெய்லர் வெளியானது! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Photo of author

By CineDesk

‘தலைவி’ திரைப்படம் டிரெய்லர் வெளியானது! உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

சென்ற ஆண்டு அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று பற்றிய வெப் சீரிஸ் ‘குயின்’ என்ற தலைப்பில் வெளியானது. அதில்  ஜெ.ஜெயலலிதா அவர்களின் குழந்தை பருவத்தை சைல்டு ஆர்டிஸ்ட் அணிக்கா சுரேந்ரன் மற்றும் ஜெ.ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்னும் தத்துருபமாக நடித்து அசத்தி இருந்தனர்.

தற்போது இயக்குநர் விஜய் தயாரிப்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் மற்றும் நடிகர் அரவிந் சாமி நடிப்பில் உருவான ‘தலைவி’ திரைப்படம் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று பற்றிய படம். இதன்  டீஸர் கடந்த ஆண்டு வந்தது. அதைத் தொடந்து எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில். இன்று ‘தலைவி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத், அவரது டிவிட்டர் பக்கத்தில் திங்களன்று நான் நடித்த வாழ்க்கை வரலாற்று-நாடகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான டிவெளியிட உள்ளதாக கூறி அவரது ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டினார்.

அந்த வகையில் இன்று ‘தலைவி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதைத் தொடர்ந்து ‘தலைவி’ திரைபடத்தின் ஆடியோ லான்ச்சில் பேசிய பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் இதற்கு முன் நடித்த பல படங்களுக்கு எந்த ஒரு பாராட்டுகளும் கிடைத்தது இல்லை.  இந்த படத்திற்காக வந்த பாராட்டுகள் எனக்கு அளவில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது என்று கூறி கண் கலங்கினார். மேலும் இந்த ஆடியோ லான்ச்சில் அரவிந் சாமி எனக்கு எம்ஜிஆர் ஆக நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த படத்தின் மூலம் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது என்றும் கூறினார்.