செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Hasini

செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் தற்போது கைப்பற்றி உள்ளனர்.  மேலும் அவர்களை நினைத்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சம் கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவார்கள், என்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுவதுமே தப்பித்தால் போதும். பிழைத்தால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.

ஆப்கன் மக்கள் முழுவதும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். பலர் நாட்டை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். சிலர் தப்பிச் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு உள்ள மக்கள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர். அங்கு உள்ள மக்களுக்கு அச்ச உணர்வு அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசு படைகளை விரட்டி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கும் தலிபான்கள் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியிருக்கின்றனர். இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும்  திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இந்த குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் சண்டைகள் முடிந்து விட்டது.

காபூல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒரு சாதாரண விபத்துதான். யாரும் பயப்படத் தேவையில்லை. உள்நோக்கத்துடன் எதுவும் நடக்கவில்லை. தலிபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டு பணிகளுக்காக வேலை செய்தவர்கள் என யார் மீதும் எங்களுக்கு பழிவாங்கும் எண்ணமும் கிடையாது.

மேலும் அவர்களின் வீடுகளையும் சோதனையிட மாட்டோம். ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல்  இருக்காது என்பதையும் உலக நாடுகளுக்கு உறுதி அளிக்கிறோம். இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஊடக சுதந்திரமும் அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தலீபான்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து உலக மக்களை கண் கலங்க வைய்த்த நிலையில், தற்போது அவர்களது இந்த செய்தியாளர்கள் சந்திப்பு மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என நம்புவோம்.