ADMK BJP: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தவுடன், செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்துள்ளார். இது அதிமுக தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது, இவர் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்கப் போகிறார் மேற்கொண்டு அதிமுக கட்சி ரீதியான வழக்கும் நிலுவையில் உள்ளது.
கடந்த முறையை இந்த வழக்கானது ஓபிஎஸ்-க்கு சாதகமான நிலையில் தற்பொழுது நீதிமன்ற உத்தரவு அதன்படியே வரும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மற்றொன்று செங்கோட்டையன் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில் சரியான மரியாதை கொடுப்பதில்லை. குறிப்பாக அவர் தொகுதியிலேயே அவருக்கு எதிரான நிர்வாகிகளை கிளப்பி விட்டு எடப்பாடி வேடிக்கை பார்த்து வருகிறார். இதனின் உச்சகட்ட கோபத்தில் தான் செங்கோட்டையன் ஓபிஎஸ் பக்கம் சென்றால் கட்சியை வளைத்து விடலாம் என்று திட்டம் போட்டுள்ளார்.
இவையனைத்தையும் சம்பந்தப்பட்டு பேசுவதற்காக தான் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். ஆனால் டெல்லியில் இவருக்கு வேறொரு ட்விஸ்ட் காத்திருந்துள்ளது. உங்களுக்கு எடப்பாடிக்கு நிகரான தலைவர் பதவி ஒன்று அமைத்து பொறுப்பேற்று விடுகிறோம். இருவரும் இணைந்து வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுங்கள். வெற்றி பெற்ற பிறகு அந்த தலைமை பதவிக்கு தகுந்த அனைத்து அதிகாரங்களையும் எடப்பாடிடமிருந்து மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். டெல்லி மேலிடம் சொன்ன வார்த்தை நம்பி அதிமுகவில் இணைந்து செங்கோட்டையன் வேலை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.