விமான நிலையத்தில் ரசிகருடன் நடனம் ஆடிய தமன்னா!! இணையத்தில் வீடியோ வைரல்!!

0
207
Tamanna danced with a fan at the airport!! Video viral on the internet!!
Tamanna danced with a fan at the airport!! Video viral on the internet!!

விமான நிலையத்தில் ரசிகருடன் நடனம் ஆடிய தமன்னா!! இணையத்தில் வீடியோ வைரல்!!

பிரபல நடிகை தமன்னா அவர்கள் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவருடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சுனில், ஜேக்கி ஷெரூப், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள ஜெமிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். ஜெயிலர் திருப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான காவாலா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த பாடல் தற்பொழுது இணையத்தில் தீயாக பரவி வருகின்றதூ. அதற்கு காரணம் நடிகை தமன்னா அவர்கள் காவாலா பாடலில் ஆடிய நடனமும் அனிருத் அவர்களின் இசையும் இந்த பாடலை பாடிய ஷில்பா ராவ் அவர்களும் தான் காரணம்.

ஏற்கனவே நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி பதிவேற்றிய வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. தற்பொழுது விமானநிலையத்தில் நடிகை தமன்னா அவர்கள் காவாலா பாடலுக்கு ரசிகருடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகை தமன்னா அவர்களை பார்த்த ரசிகர் ஒருவர் காவாலா பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று கேட்டார். அதற்கு நடிகை தமன்னா அவர்கள் “நான் செல்ல வேண்டிய விமானத்துக்கு நேரமாகிவிட்டது” என்று கூறினார். இருந்தும் அவரை விடாத ரசிகர் மீண்டும் மீண்டும் கேட்டதால் ரசிகனுடன் சேர்ந்து நடிகை தமன்னா அவர்கள் நடனம் ஆடினார். பின்னர் “என்னை விட இவர் சிறப்பாக ஆடுகிறார்” என்று ரசிகரை பாராட்டி நடிகை தமன்னா சென்றார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleஇவர் ஒழுங்கா இருந்தாலும் இவர் கிரகம் இவரை சும்மா விடுவதில்லை!! எழு மாதங்களாக கேமரா முன் நிற்காத சிம்பு!!
Next articleசினிமாவில் அரசியல் நடப்பதாக குற்றச்சாட்டு!! உண்மையை உடைத்த நடிகை!!