பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

0
103

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

இந்த ஒரு படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு புதியதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே!.

தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் படம் என்பதால் இதற்கு வழக்கத்தை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்த படத்தில் வடிவுக்கரசி, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன், வசுந்தரா, உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் இயற்கை விவசாயம், மண்புழு உரம், எளியவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்ட கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பார்.

விவசாயம் படித்து முடித்த ஒரு இயற்கை விவசாயியாக அந்த படத்தில் உதயநிதி நடித்திருப்பார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடித்திருந்தார்.வங்கி மேலாளர் கதாபாத்திரத்தில் ஆடம்பரமே இல்லாமல் தமன்னா எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படம் வசூல் செய்தியாக வெற்றி பெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. உதயநிதி மற்றும் தமன்னாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

மேலும் இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தொடர்ச்சியாக பல விருதுகளை குவித்து வருகிறது.இந்த சூழ்நிலையில் இந்த திரைப்படத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது.

இந்தோ-பிரெஞ்ச் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்து சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

இந்த விழாவில் சிறப்பு தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவிற்கும், சிறந்த சப்போர்ட்டிங் விருது நடிகை வடிவுக்கரசிக்கும், கிடைத்துள்ளது.

பட விழாவில் மூன்று விருதுகளை கண்ணே கலைமானே திரைப்படம் தட்டி தூக்கி உள்ளது. இதனால் ரசிகர்கள் உதயநிதி, தமன்னா, சீனு ராமசாமி உள்பட  பட குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபோலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!
Next articleஉலகில் அசைவ நாடு ரஷ்யா!! அப்போ சைவ நாடு எது தெரியுமா??