ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

Photo of author

By Vinoth

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

Vinoth

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் தொடர்ங்கியது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்தை தவிர நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படையப்பா படத்துக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் ரஜினியோடு இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. யோகி பாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் தமன்னாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி தமன்னா படத்தில் ஒரு சிறிய கௌரவ வேடத்தில்தான் நடிக்கிறாராம். ரஜினி படத்தில் சிறிய வேடத்திலாவது நடிக்க வேண்டும் என அவரே வேண்டி விரும்பி இந்த படத்தில் இணைந்துள்ளாராம். தற்போது ஷுட்டிங் சென்னையின் பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில் நடந்து வருகிறது.