பிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா காலமானார்

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டிஎஸ் ராகவேந்திரா இன்று சென்னையில் காலமானார்

விஜயகாந்த், ரேவதி நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கிய ’வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான டிஎஸ் ராகவேந்திரா அதன்பின்னர் சிந்துபைரவி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, சின்னத்தம்பி பெரியதம்பி உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார்

இந்த நிலையில் இன்று காலை சென்னை மேற்கு கேகே நகரில் உள்ள தனது வீட்டில் டிஎஸ் ராகவேந்திரா காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பல திரையுலக பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டிஎஸ் எஸ் ராகவேந்திரா அவர்களுக்கு சுலோசனா என்ற மனைவியும், கல்பனா, ஷேகினா என்ற மகனும் உள்ளனர் என்பதும் இருவருமே பாடகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மறைந்த நடிகர் டிஎஸ் ராகவேந்திரா அவர்கள் ‘யாகசாலை’, ‘உயிர்’ மற்றும் ‘படிக்காத படம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment