திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு!
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமதாஸ் அவர்கள் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அப்படி எனில் தமிழ் அழிந்து விட்டதாக தானே அர்த்தம். தமிழின் முதல் எதிரி திராவிடம் தான். திராவிடத்தை ஒழிக்க விட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது.
ஈரோடு இடைத்தேர்தலில் இவிகேஎஸ்.இளங்கோவன் தான் வேட்பாளர் என்று அறிவித்ததும் எதிர்க்கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது.
மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டார். அடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கும் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அது சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டார்.
இவ்வாறு திமுக அமைச்சர்களே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே மக்கள் திமுகவின் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். மேலும் எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரிய வேண்டும்.
காங்கிரசுக்கு கமல்ஹாசனின் ஆதரவு குறித்து அவர் கூறுகையில் ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் என்ற கணித முறைப்படி தான் கமல்ஹாசனின் ஆதரவு காங்கிரசுக்கு அமையும் என்று அவர் கூறியுள்ளார்.