காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம்! புலம்பித் தவிக்கும் உயரமான நடிகர்!

0
186

பிரபல நடிகரின் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் செய்தியை கேட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் அந்த உயரமான நடிகர்.

 

தமிழ் சினிமாவின் உயரமான ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகர். படத்தில் நடிப்பது மட்டும் செய்திருந்தால் நல்ல நிலைக்கு வந்திருப்பார். எல்லா இடத்திலும் மூக்கை நுழைத்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

சமீபகாலமாக அந்த உயரமான நடிகர் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே எந்தப் படமும் ஓடவில்லை என்று சோகத்தில் இருந்த அவருக்கு தன் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

 

சமீபத்தில் காதல் வலையில் விழுந்து பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

 

ஆனால் அந்த உயரமான நடிகருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் இருந்த தொடர்பு அவரது காதலிக்கு தெரியவரவே காதலும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி ஓடி விட்டாராம்.

 

எப்படியாவது சமாளித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தாராம். ஆனால் அதற்குள் அவரது காதலி வேறு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டாராம். இதைக் கேட்ட அந்த உயரமான நடிகர் உள்ளதும் போச்சு என்ற அளவிற்கு மிகுந்த மன வருத்தத்தில் உள்ளாராம்.

Previous articleதொடையை தூக்கி ரம்பாவையே மிஞ்சும் சிம்பு பட நடிகை எடுத்த போட்டோ ஷூட்!
Next articleஇந்த ராசிக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும்! இன்றைய ராசி பலன் 04-12-2020 Today Rasi Palan 04-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here