கன்னட படத்தை ரீமேக் செய்ய உள்ள தமிழ் இயக்குனர்! ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலம்!

0
165

காமெடி மற்றும் ஹாரர் படங்களை இயக்கி அதில் சில படங்களில் நடித்து வரும் இயக்குனர்தான் சுந்தர் சி. இவர் தற்போது அரண்மனை 3 என்ற படத்தை இயக்குகிறார்.குஜராத்தில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடந்தபோது  கொரோனா பரவல் அதிகமானது.இதன் காரணமாக படக்குழு சென்னை திரும்பியது.

ஒவ்வொரு அரண்மனை படத்திலும் நடிகைகளை இன்க்ரீஸ்  செய்து கொண்டே போகும் சுந்தர் சி அவர்கள் அரண்மனை படத்தில் ஹீரோவாக ஆர்யாவ ஆர்யாவும், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய  மூவரையும் நடிக்க வைத்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்யா தான் பேயாக இருப்பார் என்று கூறப்படுகிறது இந்த படத்தின் அடுத்த சூட்டிங்  ஷெட்யூல் சென்னையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சில படங்களை அவ்னி சினி மேக்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இப்போது கன்னடத்தில் ஹிட்டான மாயாபஜார் என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறார்.இந்த படத்தில் கன்னட பிரபலங்கள் பலர் நடித்திருந்த படத்தை வெற்றிப் படமாக்கினர்.

கன்னடத்தில் பெரும் ஹிட்டடித்த இந்த படத்தினை தமிழில் ரீமேக் பத்ரி இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் வீராப்பு, ஐந்தாம்படை , தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு ஆடாம ஜெயிச்சோமடா ஆகிய படங்களை இயக்கியவர். சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.தமிழில் ரீமேக் ஆக உள்ள இந்த படத்தில் அஸ்வின்,யோகிபாபு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் ஹீரோயினாக ரைசா வில்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர். இவர் ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நாளை தொடங்குவதாக கூறப்படுகிறது.

Previous articleசம்பாதித்த மொத்த சொத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை!
Next articleஅயோத்தி ராமர் கோயிலுக்கு தூத்துக்குடியிலிருந்து செல்லும் 600 கிலோ எடையுள்ள மணி !!