சமீபத்தில் வெளியான பாலிவுட் படத்தின் டீசரை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து தள்ளி கொண்டிருக்கின்றனர்.
கரண் ஜோகர் தயாரிப்பில் விவேக் சோனி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘மீனாட்சி சுந்தரேஸ்வர்’
திரைப்படம். இந்த திரைப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா , அபிமன்யு தசானி நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.
பாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் மதுரையில் நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு சாயல் அதிகமாகவே இந்த திரைப்படத்தில் உள்ளது.
காதல், குடும்ப உறவுகளை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தில் நாயகன் ஒரு பொறியாளராக வருகிறார்.
https://twitter.com/madhu13varnan/status/1447955683152781325
https://twitter.com/dragondeenas/status/1447811341369053184
https://twitter.com/Akshita_N/status/1448124031937519617
https://twitter.com/sambarvade/status/1448152619663253504
https://twitter.com/vvignettist/status/1447848556581122056
ஹீரோ, ஹீரோயின்க்கு நடக்கும் திருமண ஏற்பாடுகள், காதல், காதலில் ஏற்படும் தடுமாற்றம் என நகர்கிறது இந்த திரைப்படம்.
இந்த திரைப்படம் நெட்பிலிக்ஸ்சில் வெளியாக உள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் டீசெர் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே படாத பாடு பட்டு வருகிறது.
இதன் டீசரில் ரஜினிகாந்த் பற்றிய ஒரு பாடலும், நாயகி கதாநாயகனிடம் ரஜினி தெரியுமா என கேட்கும் பொழுது அவர் தெரியாது என சொல்லும் போது ஹீரோயின் முகம் மாறுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இதனை நெட்டிசன்கள் தற்போது கடுமையாக கண்டித்து வருகிறார்கள். தமிழ்நாடு என்றாலே ரஜினிகாந்த், மல்லிப்பூ, சாம்பார் சாதம் தானா என எரிச்சலுடன் கருத்து கூறி வருகிறார்கள். அடுத்து ஒரு சென்னை எக்ஸ்பிரஸ் என கலாய்க்கின்றனர்.
https://youtu.be/I1h8AdVFY1M