தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!!
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அண்ணாசாலையில் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் நடிகைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குழு உறுப்பினார்கள் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கனவே தயாரிப்பாளர் கூட்டத்தின் போது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிகொண்டு படப்பிடிப்பை முடித்து தராமல் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டப்பிங் வேலையை முடித்து தராமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த பிரச்சனை செய்து வந்த 5 பேரும் படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்பு கொண்டு படம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் அந்த 5 நடிகர்கள் பெயரையும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
தற்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டதில் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முரளி, சதிரேசன், சத்யஜோதி மற்றும் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்கள். மேலும் இவர்கள் மட்டுமின்றி நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகை கோவை சரளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன் பணம் பெற்றுக்கொண்டு படம் நடித்து கொடுக்காமல் இருக்கும் நடிகர்கள் மற்றும் டப்பிங் செய்து கொடுக்காமல் இருக்கும் நடிகர் நடிகைகள் மீது சங்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளார்கள்.
அந்த நடிகர்கள் பட்டியலை தற்போது வெளிட்டுள்ளது தனுஷ், அதர்வா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு, ஜான்விஜய், அமலாபால், சோனியா அகர்வால், ஊர்வசி இன்னும் பலர் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர், நடிகைகள் தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.