தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

0
269
#image_title
தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!
அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அந்தந்த நாட்டு பிரதமர்களை சந்தித்து பேசினார்.
அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாஜக கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் நடைபற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி என்று பேசினார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியருடைய மொழி. பப்புவா நியூ கினியா நாட்டில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பு செய்த திருக்குறளையும் வெளியிட்டேன்” என்று கூறினார்.
Previous articleஅரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?
Next articleபுதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!