அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?

0
181
#image_title
அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி! தாமதமாக நடப்பதற்கு இதுதான் காரணமா?
அரசு அலுவலகங்களில் மட்டும் பிரீப்பெய்டு மீட்டர் பொருத்தும் பணி மட்டும் தாமதமாக நடந்து வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரி ஒருவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்துவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டுவதில்லை. சரியான முறையில் அரசு துறை அலுவலகங்கள் மின் கட்டணம் செலுத்துவதில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் 1900 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும், குடிநீர் வாரியம் 2600 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும், கல்வி உள்பட இதர அரசு துறைகள் 100 கோடி ரூபாய் மின் கட்டண தொகையும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இதையடுத்து மின் கட்டணம் செலுத்தாத அரசு நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்தவும், அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்துமாறும் மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்திலும், மறைமலை நகர் நகராட்சி அலுவலகங்களிலும் 2019ம் ஆண்டு பிரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதற்கு பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டம் முழுமையாக செயல்முறைக்கும் வரவில்லை.
தனியார் நிறுவனங்கள் சரியான முறையில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றது. ஆனால் மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசு மீதும் மின் வாரியம் மீதும் புகார்கள் எழுந்து வருகின்றது. இதையடுத்து மின் வாரிய அதிகாரி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அந்த மின் வாரிய அதிகாரி இந்த பிரச்சனை தொடர்பாக “அரசு அலுவலகங்களில் மின்சாரம் பயன்படுத்தப்படும் அளவீட்டை கணக்கெடுக்க விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். பிரிபெய்டு மீட்டருக்கான வசதியும் அந்த ஸ்மார்ட் மீட்டரில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.