ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படம்!! யாருடைய படம்னு தெரியுமா??
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பு திருநாள் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருது மற்றும் விஜய் விருதுகள் போன்றவற்றை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட போர்பஸ் இந்திய பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறுமுறை சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராகவும் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவரின் திரைப்படமான சூரரை போற்று திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்டது. மேலும் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வருவதால். உங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருந்தனர். அந்த நிலையிலும் இப்படம் பெரும் வெற்றியை கண்டது. மேலும் கொரோனா தாக்கம் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டது.
அப்பொழுதும் கூட சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தை மெல்போர்ன் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட உள்ளனர். மேலும் இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த திரையரங்கு தான் உலகளவில் மிக சிறந்த திரையரங்குகளில் ஒன்று எனவும் கருதப்படுகிறது.