தமிழ் முருகன் மாநாடு: இதெல்லாம் சரியே இல்லை.. உடனே அரசு விலக வேண்டும்!! திமுக – வை நேரடியாக அட்டாக் செய்யும் கூட்டணி கட்சிகள்!!

Photo of author

By Rupa

பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் திமுக கட்சி சார்பாக 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே திமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் நட்பு பாராட்டி வருகின்றனர். கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியாகும் விழாவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தந்தது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கவனிக்கப்பட்டது, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டது என்ற தொடர்ச்சியான சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது திமுக கட்சியும் பாஜக கட்சியும் நட்பு பாராட்டி வருகிறது என்றும் இதனால் திமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி பாஜக கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இது சார்பாக பாஜக தரப்பிலும் சரி திமுக தரப்பிலும் சரி பாஜக மற்றும் திமுக இரண்டும் கூட்டணி வைக்கவே வைக்காது என்றுதான் கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திமுக கட்சி சார்பாக நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தற்பொழுது திமுக கட்சி பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

திமுக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கவும் மேலும் பஞ்சாமிர்தம், விபூதி, முருகன் புகைப்படம் ஒன்று, குங்குமம் ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக கட்சி செய்த இந்த செயல் தற்பொழுது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. கூட்டணி கட்சிகளே திமுக செய்த இந்த செயலை விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 5 வது தீர்மானமாக ‘இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோயில்களின் சார்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்தப்படும். அதை தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘விழாக்காலங்கள் வந்தால் முருகன் கோயில்களில் மாணவர்களை வைத்து கந்த சஷ்டி பாராயாணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’ என்று 8வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் “இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோயில்களின் சார்பாக கல்லூரிகளில் முருகன் குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் சிறப்பு பாடப்பிரிவுகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யலாம்” என்று எட்டாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்பி ரவிக்குமார் அவர்கள் “சமீபத்தில் திமுக கட்சி சார்பாக நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சமயம் சார்பற்ற தமிழ் அடையாளத்தை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. இருந்தாலும் திமுக அரசு நடத்திய இந்த மாநாடு வகுப்புவாதத்தையே ஏற்படுத்தும்.

ஏன் வகுப்பு வாதத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றேன் என்றால் தமிழ் கடவுள் என்று கூறப்படும் முருகன் நீண்ட காலத்திற்கு முன்பே இந்து என்ற அடையாளத்திற்குள் இழுக்கப்பட்டு விட்டார். தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு அடுத்து படையல் போடப்பட்டது என்று சங்க இலக்கியங்களில் கூறப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் அவ்வாறு இருக்க தற்பொழுது தமிழ் கடவுள் முருகனுக்கு மக்கள் ஆடு அறுத்து படையல் போட முடியாது. தமிழ் கடவுள் முருகனைப் போலவே மற்ற கடவுள்களும் எப்பொழுதோ இந்து அடையாளத்துக்குள் உள்வாங்கப்பட்டு விட்டனர்.

முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதிர்ச்சியளிக்கின்றது. கல்வியையும் காவிமயமாக்குவது போலத்தான் இந்த தீர்மானங்கள்அனைத்தும் இருக்கின்றது.

கல்வியை சமய சார்புடையதாக மாற்றுவதை பாஜக அரசு கொள்கையாக வைத்திருக்கும் நிலையில் பாஜக அரசின் இந்த இந்துத்துவ செயல்திட்டத்தை முருகன் மாநாடு என்ற பெயரில் திமுக கட்சி நிறைவேற்ற முயற்சி செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையானது தானாக முன்வந்து  தன்னுடைய துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதை யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். அதுவே கல்வித் துறைக்குள் சமயத்தை கொண்டு வருவது என்பது அரசியல் சட்ட நெறிக்கு எதிரானது. இது கண்டனத்திற்குறியது” என்று விமர்சனம் செய்துள்ளார்.

அதே போல திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் “மதத்தில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பது தான் மதச்சார்பின்மை என்று கூறப்படுகின்றது.அது தான் மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். சமயம் மதம் போன்ற நடவடிக்கைகளில் இருந்து முதலில் அரசு விலகி இருக்க வேண்டும்.

எந்தவொரு மதத்தையும் பரப்புவது அல்லது மதத்தின் கோட்பாடுகளை பின்பற்றுவது அல்லது மதத்தை பின்பற்றுவது ஆகிய மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது அரசின் செயல் அல்ல. அது அரசின் பணியும் அல்ல. அரசின் பணி.மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பது, மதநல்லகணக்கம் ஆகியவை தான்.

இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து செயல்பட்டு வருகின்றது.அவர்களின் நோக்கமே சாதிய படிநிலைகளை பாதுகாப்பதும், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளை அடிப்பதும் மட்டும் தான்.

இதுபோன்ற நோக்கங்களுக்காக நாம் உடன் இணைந்து செயல்படக்கூடாது. இதை குணப்படுத்த முறையடிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும். முதலில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை அரசு ஏற்று நடத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.