தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!!
இந்த வருட பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் தலைமை கோட்டையில் வெளியிட்டார். இதில் பத்துக்கும் மேற்பட்ட புதிய சலுகைகள் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தனித்துவமான எந்த ஒரு பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை. குறிப்பாக பாஜக ஆட்சி அமைக்க கூட்டணியிலிருக்கும் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்திற்கு த்தான் அதிகப்படியான பட்ஜெட்டானது ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு முதியோருக்கு வழங்கப்பட்ட தொகை உள்ளிட்டவைகளில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது எந்த ஒரு புது அறிவிப்பும் இல்லை. அதுமட்டுமின்றி பேரிடர்களுக்கு மத்திய அரசு தற்பொழுது வரை தமிழகத்திற்கு பணம் வழங்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பீகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடர் ஏற்பட்டதற்கு பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.
குறிப்பாக மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் பூஜ்ஜியம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் பட்ஜெட்டில் அதன் தாக்கத்தை மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் தமிழகத்திற்கு இல்லாததால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மத்திய அரசிடம் எந்த ஒரு சலுகையும் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சி சார்ந்தவர்கள் வைத்து வருகின்றனர். நாற்காலியை தக்க வைப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் நடந்ததாக கூறுகின்றனர். குறிப்பாக ஆந்திராவிற்கு 26 ஆயிரம் கோடியும் பீகாருக்கு 15 ஆயிரம் கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளனர்.