சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!!

0
246

சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் தேர்வு முடிவுகள்!!

12- ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகளை இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த நிலையில்,
தற்போது துணை தேர்விற்கான தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு வெளியிடவுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.மேலும் & என்ற இணையதளம் முகவரியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்,விடைத்தாள் நகலினை பெற 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.மேலும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாயும்,ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Previous articleகுட் நியூஸ்! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை!
Next article அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!