தமிழக வாக்குப்பதிவு! குறைந்த வாக்கு சதவீதம்!

0
137

தமிழகத்திலே கடந்த சில வாரங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் நேற்றையதினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தமாக 71. 79 சதவீத வாக்குப் பதிவுகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல்களம்.கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் பிரச்சாரம் என பரபரப்பாக காணப்பட்டது. அந்த பரபரப்பில் இறுதிக்கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகளும், பதினோரு மணி அளவில் 26. 29 சதவீத வாக்குகளும், மதியம் ஒரு மணி அளவில் 39.61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல 3 மணி அளவில் 53.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59 73 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 41. 58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மதியம் 3 மணி அளவின் நிலவரப்படி 63.7 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதேபோல அந்த தேர்தலோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் மூன்று மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 10.35 சதவீதம் குறைவாக இருக்கிறது. அதுபோல மாலை 5 மணி நிலவரப்படி 63 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவீத வாக்குப்பதிவு குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 50.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் 55. 31% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 69 .19 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தன. அதன்படி தற்சமயம் 5.55 சதவீதம் குறைவாக இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் மாலையில் அதிக அளவில் வாக்குச்சாவடிகளில் வந்து வாக்களித்ததாக தெரிவிக்கிறார்கள்.

Previous articleமுடிந்தது ஜனநாயகத் திருவிழா! வெற்றி யாருக்கு?
Next articleஅதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!