டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தயாராகும் தமிழக வீரர்கள்

Photo of author

By Parthipan K

2021 காண ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கான இந்திய வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், 2️ வீரர்களும் இந்தியா சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் 4×400தொடர் ஓட்டத்தில் பங்கு பெற உள்ளனர்.

இவ்வாறு ஆண் பெண் இருபாலரும் இணைந்து ஓடும் தொடர் ஓட்டத்திற்கு (mixed relay) தேர்வான ஐவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவே முதல் முறை.

வீரர் வீராங்கனைகள் பட்டியல்:
சுபா
தனலட்சுமி
ரேவதி
ஆரோக்கியராஜ்
நாகநாதன்

இதில் சுபா, தனலட்சுமி ,ரேவதி ஆகிய மூவருமே திருச்சியை சேர்ந்தவர்கள்.

இதில், ஆரோக்கிய ராஜ் என்பவர் இதற்கு முன்னரே ஆசிய ஒலிம்பிக்கில் பங்குபெற்ற அனுபவம் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆறு தேசிய விருதுகளை இதற்கு முன்னரே பெற்றுள்ளார்.

இவர்கள் ஐவருமே நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்களின் குடும்பத்தினர் இவர்களை கண்டு பெருமிதம் கொள்ளும் இவ்வேளையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளுக்கு தல 5 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக்ஸில் பங்கு பெறுவதற்கு முன்பே வீரர்கள் பரிசுத் தொகையை வெல்வது இதுவே முதல் முறை.