மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! மின்வாரிய ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

Photo of author

By Parthipan K

மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! மின்வாரிய ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

2023 24 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இம்மாதம் 20ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார். மேலும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கையாகும். மகளிர்களுக்கு  மாதம் 1000 ரூபாய்  உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாக உள்ளது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக மின்துறை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நிறைவடையும் வகையில் மின்வாரிய ஊழியர்கள் யாரும் வெளியூர் பயணம் செய்யக்கூடாது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி முடிவுக்கு வரும் வரை மின்வாரியம் சார்ந்த எந்த தகவலையும் அரசு கோரினாலும்  உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் மார்ச் 20ஆம் தேதி முதல் முடியும் காலம் வரை மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் காலை 9.3௦  மணிக்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் மின்வாரிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.