இன்று காலை. 10.30 மணி அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது 8 மாவட்ட முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்,குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்வதற்கு ரூபாய். 9 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அதில் உடனடியாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
வரும் நவம்பர் மாதம் வரை நியாயவிலைக் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்வதற்கு 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்வை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் பங்கேற்றார்.
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பல முறை ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வந்தார்.